← ரிக்வேத மாத்யாஹ்நிகம் வழிமுறை
மாத்யாஹ்னிகத்தில் காயத்ரீஜபம் செய்த பிறகு கீழ்க்கண்ட முறையில் ப்ரஹ்ம யஜ்ஞம் செய்யவேண்டும் :
ஓம்பூ: ... புவஸ்ஸுவரோம் |
"மமோபாத்த ஸமஸ்ததுரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரஹ்மயஜ்ஞேந யக்ஷ்யே" என்று ஸங்கல்பம் செய்து,
"வித்யுதஸி விருஶ் மே பாப்மாநம் - ரிதாத் ஸத்ய முபைமி"
என்று சொல்லி ஜலத்தினால் கைகளைச் சுத்தம் செய்து கொண்டு, மூன்று தடவை ஆசமனம் செய்து, இரண்டு தடவை உதடுகளைத் துடைத்து, கையை அலம்பி, இடது கை கால்களைப் புரோக்ஷித்து, தலை, கண், மூக்கு, காது, மார்பு இவைகளைத் தொட்டு, பிறகு வலது கை கீழாகவும் இடது கை மேலாகவும் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்க்கண்டவைகளைச் சொல்லுக:
ஓம் பூ: - தத்ஸவிதுர்வரேண்யம்
ஓம் புவ: - பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓகும் ஸுவ: - தியோ யோ ந: ப்ரசோதயாத்
ஓம் பூ: - தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம் புவ: - தியோ யோ ந: ப்ரசோதயாத்
ஓகும் ஸுவ: - தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்
ஹரி: ஓம் || அக்நிமீளேபுரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத்விஜம் - ஹோதாரம் ரத்ந தாதமம் - ஹரி: ஓம் ||
ஓம் அத மஹாவ்ரதம் - ஏஷ பந்தா: - ஏதத் கர்ம - அதாத: ஸம்ஹிதாயா: - உபநிஷத் - விதாமக ந்விதா காதும் மஹாவ்ரதஸ்ய பஞ்சவிம்ஶதி ஸாமிதேந்ய: | அக்நிர் வை தேவாநா மவமோ விஷ்ணு: | |
அதைதஸ்ய ஸமாம்நாயஸ்ய விதாநோ யோ காபத்திம் வக்ஷயாம: - உக்தாநி வைதாநிகாநி க்ருஹ்யாணி வக்ஷ்யாம:
யதிந்த்ராதௌ தாஶராஜ்ஞே மாநுஷம் வ்யபாகா ஹதா:| இதம் ஜுநா உபஶ்ருதா நாராஶம்ஸஸ் தவிஷ்யதே |
ஆத்யம் புருஷமீஶாநம் - யோகீஸ்வரம் யாக்ஞ்ய வல்க்யம் | நமோ ஹிரண்யகர்பாய ஹரயே ஶங்கராயச | மயரஸதஜபநலகஸம்மிதம்
அத: ஶீக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி
"ஓம் கௌ: - க்ம - ஜ்ம - க்ஷ்ம அதாதோ தர்மஜிஜ்ஞாஸா
ஓம் நமோ ப்ரஹ்மணே ப்ருஹதே கரோமி"
இதை மூன்று தடவை சொல்லவும்.
ஹரி: ஓம் || இஷே த்வோர்ஜே த்வா - வாயவஸ்தோ பாயவஸ்த - தேவோ வஸ் ஸவிதா ப்ரார்பயது ஶ்ரேஷ்டதமாய கர்மணே - ஹரி: ஓம் ||
ஹரி: ஓம் || அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே - நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி - ஹரி: ஓம் ||
ஹரி: ஓம் ஶந்நோ தேவீ ரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே - ஶம் யோ ரபிஸ்ரவந்து ந: - ஹரி: ஓம் ||
ஓம் பூர் புவஸ்ஸுவ: - ஸத்யம் தப: ஶ்ரத்தாயாம் ஜுஹோமி
என்று ஜலத்தால் பிரதக்ஷிணமாகச் சிரஸைச் சுற்றவேண்டும்
பிறகு,
"ஓம் | நமோ ப்ரஹ்மணே — நமோ அஸ்த்வக்நயே — நம: ப்ருதிவ்யை — நம ஓஷதீப்ய: — நமோ வாசே — நமோ வாசஸ்பதயே — நமோ விஷ்ணவே — ப்ருஹதே கரோமி"
என்ற மந்திரத்தை மூன்று தடவை சொல்லவும்.
"வ்ருஷ்டிரஸி விருஶ்ச மே பாப்மாநம் - ரிதாத் ஸத்ய முபாகாம்"
என்று ஜலத்தினால் கைகளைச் சுத்தி செய்துகொள்ள வேண்டும்.
பூணூலை மாலையாக (நிவீதி) போட்டுக்கொண்டு,
பூணூலை வலது தோளில் (ப்ராசீனாவீதி) மாற்றிக்கொண்டு, கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் கட்டை விரல் கீழ்நோக்கி இருக்கும்படி மூன்று முறை ஜலம் விடவும்.
யத்ர க்வசந ஸம்ஸ்தாநாம்
க்ஷுத் த்ருஷ்ணோபஹதாத்மநாம் |
பூதாநாம் த்ருப்தயே தோயம்
இதமஸ்து யதாஸுகம் |
த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத || ஜலம் விடவும்.
கீழே குறிக்கப்படும் தர்ப்பணம் சிலருக்குப் பாடமிராது.
(தர்ப்பணத்தில் எள்ளைச் சேர்த்துக் கொள்ளவும்)
உபவீதி ஆசமனம்.
உபவீதி ஆசமனம். ரிக்வேதி ப்ரஹ்ம யஞ்ஞம் முற்றிற்று.