காயத்ரீ ஜபம்
தயாராகுதல்
இரண்டு தர்ப்பைகளை காலுக்கு அடியில் போட்டுவிட்டு, “தர்பாந்தாரே மாணஹ” என்று கூறவும். பவித்திரத்தை கையில் மாட்டவும். மேலும் இரண்டு தர்ப்பங்களை அதே விரலில் இடுக்கிக் கொள்ளவும்.
ஸந்தியாவந்தனம் தொடக்கம்
ஸந்தியாவந்தனம் ஆரம்பித்து காயத்ரீ ஜப சங்கல்பம் பகுதி, கணபதி த்யானம் வரை சொல்லவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸந்நவதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே ||
ப்ராணாயாமம் செய்யவும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜந: ஓம் தப: ஓம் ஸத்யம் |
ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந: ப்ரசோதயாத் |
ஓம் ஆப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸ்வரோம் ||
இன்றைய காயத்ரீ ஜப ஸங்கல்பம்
தொடர்ந்து செய்ய வேண்டியது
மறுபடியும் ஸந்தியாவந்தனப் பகுதியைத் தொடரவும்.
ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்மா...
ஓம் பூ... 11 தடவை
ஆயாதித்தய அனுவாகஸ்ந...
முக்தாவிக்த்தரும...
காயத்ரீ மந்திர ஜபம்
ஓம் பூர்புவஸ்ஸ்வ: தத்ஸவிதுர்வரேண்யம் |
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
காயத்ரி மந்திரம் 1008 தடவை ஜபிக்கவும்.
பின்னர் உபஸ்தானம் செய்யவும்.